பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்- சிலாவத்துறை வைத்தியசாலைக்கான புதிய குழுவினர் தெரிவு

சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய அபிவிருத்திக் குழுவினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன் போது செயலாளராக சட்டத்தரணி PM முஜீபுர் ரஹ்மான் ,பொருளாளராக அதிபர் AT றைஸ்தீன் மற்றும் ஏனைய 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

பதவிவழித் தலைவராக வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி H தன்ஸீஹ் கடமையாற்றுவார்.

குறித்த கூட்டத்தை பல் வைத்திய அதிகாரி ஜனாப் றிஸ்வான் நெறிப்படுத்தினார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சார்பாக பல் வைத்தியத்துறைப் பணிப்பாளர் திருமதி சிறீதேவி கலந்து கொண்டார்.

Related posts

புத்தளத்தில் சில இடங்களை முடக்க ஆலோசனை! 800 இத்தாலி நபர்

wpengine

பிள்ளையானின் வழக்கானது, சட்டத்தரணி உதய கம்மன்பில பேசும் முதல் வழக்காக இருக்கும். – டில்வின்

Maash

11 இடங்களில் கத்திக்குத்து, பூசா சிறைச்சாலையில் கைதியொருவர் கொலை .

Maash