பிரதான செய்திகள்

மன்னார், சிலாவத்துறை, சவுத்பார் பகுதியில் கைதான மீனவர்கள்

மன்னார் சிலாவத்துறை மற்றும் சவுத்பார் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் 22 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாவத்துறை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்துகொண்டிருந்த 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது 03 படகுகள், ஒட்சிசன் சிலிண்டர்கள் 03, நிர் மூழ்கி உபகரணங்கள், தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் 16 கிலோகிராம் கடலட்டைகள் உட்பட மேலும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதுதவிர சவுத்பார் கடற்பரப்பில் வெடி மருந்துகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 06 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் அனைவரையும் மன்னார், மீன்பிடி பரிசோதனை அலுவலகத்தில் ஒப்படைத்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்.!

Maash

மன்னார் நகர சபையின் புதிய அலுவலக மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

wpengine

யாழ் பேஸ்புக் காதலுக்கு 10லச்சம் ரூபா நகை வழங்கிய பெண்

wpengine