பிரதான செய்திகள்

மன்னார் சித்திவிநாயகர் மழலைகள் முன்பள்ளி சிறுவர்களின் நிகழ்வு

மன்னார், சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் நம்பிக்கை மழலைகள் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா பரிசளிப்பு நிகழ்வு கடந்த 29- 11- 2018 நாவலர் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் நம்பிக்கை மழலைகள்
முன்பள்ளியின் பொறுப்பாசிரியர் திரு.பா.சதீஸ் தலைமையில் நடைபெற்றன இந்நிகழ்வில்
பிரதம விருந்தினராக
திரு.ஆ.பிரகலாதன் இளைப்பாறிய அதிபர் சிறப்பு விருந்தினராக
திருமதி.பி.வசந்தி பிரதி அதிபர் மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலை இவர்களுடன் கலந்து சிறப்பித்தனர்.

மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் தேச கீர்த்தி ,தேச அபிமானி திரு. S.R.யதீஸ் அவர்களினால் விசேட நிகழ்வாக கல்லூரி சமூகத்தின் அன்பான வேண்டுகோளினை ஏற்று முன்பள்ளி மாணவர்களின் கல்வி உயர்வுக்கு உதவியாக ” மடி கணணி” ஒன்றை வழங்கியதுடன் பாடசாலை நாட்களில் முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஒரே வகையான சீருடை அணியும் விருப்புடன் அனைத்து ஆசிரியர்களுக்கும் சீருடைகளையும் வழங்கியதுடன் அத்துடன் ஆசிரியர்களின் தியாகம் நிறைந்த திறமைமிக்க சேவையை பாராட்டி கௌரவ சிவப்பு நிற பட்டி அணிவித்து ஆசிரியர்களை கௌரவித்தார்.

அதே வேளை திரு S.R.யதீஸ் அவர்கள் கல்லூரி சமூகத்தினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

சின்ன மாணவ மாணவிகளின் கலைநிகழ்வுகள் மிகவும் அருமையாக பார்ப்போரை மகிழ்வித்து பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை சமூகத்தினர் பெற்றோர்கள் என பலரும் கலந்துசிறப்பித்தனர்.

Related posts

மன்னார் ஆயருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் றிஷாட்

wpengine

மன்னாரில் கட்டுப்பணம் செலுத்தியது மஹிந்த அணி

wpengine

அமைச்சர் றிஷாட்டை பேஸ்புக்கில் விமர்சனம் செய்ய! ஊடக மாபியாக்களை கூட்டிசெல்லும் ஹக்கீம்

wpengine