பிரதான செய்திகள்

மன்னார் சாந்திபுரம் உப்பளம் பகுதியில் வயோதிபர் சடலம்

மன்னார் ,சௌத்பார் பிரதான வீதி, சாந்திபுரம் உப்பளம் பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலத்தை மன்னார் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தை வதிவிடமாக கொண்ட கதிர்காமநாதன் அருளானந்தன் (82 வயது) என தெரியவருகிறது.

குறித்த வயோதிபர் நேற்று இரவு வீட்டில் இருந்து சென்ற நிலையிலே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தை கண்டு மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலே மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த வயோதிபரின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திருத்தச்சட்ட வரைபு

wpengine

நினைவேந்தல் நிகழ்வினை வைத்து அரசியல் செய்த விக்னேஸ்வரன்! பின்வரிசையில் கூட்டமைப்பு

wpengine

சமுர்த்தி விட்டுதிட்ட நிதி மோசடி! விசாரணை வெளியிடப்படவில்லை

wpengine