பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் சவேரியார் கல்லூரியின் 150 வருட பூர்த்தி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 150ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 250 வறிய மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 1986ஆம் ஆண்டு சாதாரணதர பிரிவு, 1989ஆம் ஆண்டு உயர்தர பிரிவுகளில் கல்வி கற்று தற்போது இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வசித்து வரும் பழைய மாணவர்களின் நிதி உதவியுடன், இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சுமார் 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பாடசாலையின் முதல்வர், பழைய மாணவர்கள் இணைந்து கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர். மேலும் மாந்தை மேற்கு, மடு, நானாட்டான், முசலி ஆகிய பிரதேச  செயலாளர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

Related posts

இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை

wpengine

திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் அந்த கட்சியில் இணைந்தார்.

wpengine

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையினால் சிரமதான நடவடிக்கை

wpengine