பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் சவூத்பார் விளையாட்டு கழகத்திற்கு நிதியினை ஒதுக்கிய அமைச்சர் றிஷாட்! நன்றி தெரிவிப்பு

(மன்னாரில் இருந்து அஸ்மீன்)

மன்னார் மாவட்டத்தில் நகர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சவூத்பார் கிராம விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக 250000/- இரண்டு லச்சத்தி ஐம்பதாயிரம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதற்கான முதல் கட்ட வேலைத்திட்டத்தினை மன்னார் நகர பிரதேச செயலாளர் பரமதாஸ்,வன்னி பிராந்திய இளைஞர் கழக பணிப்பாளர் முனவ்வர்,மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜுப் ரஹ்மான் ஆகியோர் நேற்று (29/10) ஆரம்பித்து வைத்தனர்.

இதற்கான நிதியினை விளையாட்டு மைதானத்தின் சுற்றுவேலிக்கு பயன்படுத்த உள்ளதாகவும்,இந்த வேலையில் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு பல கோடி நன்றிகளையும் நாங்கள் தெரிவித்து கொள்ளுகின்றோம் எனவும் பல அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வழங்கிய போது அமைச்சர் தான் நிறைவேற்றி தந்துள்ளார். விளையாட்டு கழக உறுப்பினர் தெரிவித்தனர்.

இன் நிகழ்வில் கிராம மக்கள்,விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

Duties and functions of new Ministers gazetted

wpengine

வவுனியாவில் குளிர்காற்றுடன் கூடிய மழை

wpengine

குற்­றச்­சாட்­டுக்­களை மறுக்கிறார் ஸாகிர் நாயிக்

wpengine