பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் கோந்தை பிட்டி கடல் பகுதியில் பெண்ணின் சடலம்.

மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கைக்காக கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையிலேயே பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதை அவதானித்து மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை மன்னார் பாலப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்த நிலையில் அவரை தேடும் பணி இடம் பெற்ற போதும் குறித்த பெண் கிடைக்காத நிலையில் இன்றைய தினம் கரை ஒதுங்கிய சடலம் அப் பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இருப்பினும் குறித்த இளம் பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

“புர்கா தடை” என்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையே! முஸ்லிம் சமூகமே தீர்மானிக்க வேண்டும்.

wpengine

அலி சப்ரி,விக்னேஸ்வரன் முன்வரிசை! பலர் விசனம்

wpengine

அரச ஊழியர்களுக்கு தடைகளை நீக்குவது குறித்து பரிசீலினை- அமைச்சர் மனுஷ நாணயக்கார

wpengine