பிரதான செய்திகள்

மன்னார்-காட்டாஷ்பத்திரி கிராமத்தில் கேரளா கஞ்சா

மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதியினை மன்னார் பொலிஸார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து விரைந்து சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், காட்டாஸ்பத்திரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 1.5 கிலோ கிராம் கொண்ட கேரள கஞ்சா பொதியினை மீட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

Related posts

சூரிச் மாநகரில் “புளொட்” அமைப்பினர் கலந்து கொள்ளும் மாபெரும் மேதின ஊர்வலம்!

wpengine

3ஆம் திகதி 20வது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில்

wpengine

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக தமிழர் நியமனம்

wpengine