Breaking
Sun. Nov 24th, 2024

பல நூறு ஆண்டுகளாக முஸ்லிம் மையவாடியாக உள்ள நூற்றுகணக்கான ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள பெரிய கரிசல் மையவாடி காணி அயல் கிராமமான சின்னக் கரிசல் கிராமத்தை சேர்ந்தவர்களினால் தங்கள் தேவாலயத்திற்கு சொந்தமான காணி என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை மன்னார் நீதிவானினால் அங்காணி தேவாலையத்திற்கு சொந்தம் என தீர்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற பதிவாளரினால் சுற்றுவேளி அடைக்கப்பட்டு கிறிஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பெரிய கரிசல் வாழ் முஸ்லிம் மக்கள் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின் கொதித்து எழுந்த மக்கள் தங்கள் உறவுகளின் ஜனாஷாக்கள் தோண்டி எடுத்து இக் காணி எங்களுக்கு சொந்தமானது என்றும் நிருபிப்பதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவேளை அங்கு பொலிசார் குவிங்கப்பட்டு போராட்டத்தை நிறுந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அமைச்சர் றிஷாட் பதியுதீன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் இடுபட்டவர்களை போராட்டம் செய்ய வேண்டாம், என்றும் இந்த விடயத்தை மீண்டும் நாம் நீதிமன்றம் சென்று வென்றெடுப்போம் போராட்டத்தை கைவிடுமாரு கேட்டு கொண்டதுக்கிணங்க அவரின் வார்த்தைக்கு மதிப்பளித்து மக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

இதே வேளை சின்ன கரிசலை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் அவர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து மாலை 4.30 மணியளவில் அவர்களின் வீட்டில் அரையில் பழைய பொருட்கள் வைத்து தீ வைத்து விட்டு முஸ்லிம் இளைஞர்கள் அந்த நாசகார வேலையை செய்ததாக கூறி அயல் கிராமங்களில் உள்ள அவர்களை சார்ந்த இளைர்களை கொண்டு இனக்கலவரத்தை தூண்ட முயற்சி செய்த போது பொலிசாரால் சம்பவ இடத்திற்கும் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கும் 500 மீட்டர் இடைவெளி இருக்க அவ்விடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் என கூறி அவர்களை பொலிசார் எச்சரித்தனர்.

அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை கிரிஸ்தவ ஆலயத்தில் வலிபாடு நடைபெற்றவேளை தேவாலயத்தை சுற்றி 100க்கும் அதிகமான பொலிசார் இருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ஸ் நிர்மலநாதன் அயல் கிராம இளைஞர்களை கூட்டிக்கொண்டு ஞாயிறு வலிபாடு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் தேவாலயம் மீது கல் வீசியதாக கூறி மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சிகளை மேற்கொண்டார்.

குறித்த விடயத்தை பொலிசார் பொய்யான வதந்தி என நிருபித்து விட்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

இருந்த போதும் சார்ஸ் நிர்மலநாதன் மதகுரு முன்னிலையில் எமது முஸ்லீம் பெண்களை
இழிவான வார்த்தைகளை கொண்டு பேசியிருந்தார்.இதன்போது வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் வருகை தந்து குறித்த இரு சமுகங்களிம் நகமும் சதையும் போன்று ஒற்றுமையாக வாழ்ந்த சமுகம் ஏன் இந்த பிளவு என கூறி இனிவரும் காலங்களில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என வலியுறுத்தினார்.

பல வருட காலமாக உள்ள எனது கிராமத்தில் உள்ள தேவாலயம் எந்த விதமான இடையுரும் இன்றி தங்கள் வழிபாடுகளை நடத்தி செல்லும் அதேவேளை கடந்த காலங்களில் இனங்களுக்கு இடையே எதுவித அசம்பாவிங்களும் ஏற்படவில்லை.
ஆனால் சில அரசியல் தலைவர்கள் அவர்களின் அரசியல் இலாபத்திற்காக பொய்யான தகவல்களை இணைய தளங்களில் பரப்பி வருவது கவலையளிக்கிறது.

பல தசாப்தங்களாக மையாவாடியாக இருந்த எமது நிலம் எங்களுக்கு மீண்டும் கிடைக்க எமது தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பதே எனது ஊர்மக்களின் வேண்டுகோளாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *