Breaking
Mon. Nov 25th, 2024

 

(வாஸ் கூஞ்ஞ)

கரிசல் விவகார வழக்கில் மன்னார் பொலிசாரால் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஐர்படுத்தப்பட்ட எட்டு சந்தேக நபர்களில் மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதும் ஏனைய ஐந்து சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவுட்ட நீதிபதி சந்தேக நபர்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தையும் நிராகரித்தார்.


மன்னார் பொலிஸ் நிலைய பகுதியான கரிசல் பகுதியில் மன்னார் ஆரம்ப நீதிமன்ற கட்டளையை கடந்த 06.07.2017 அன்று நிறைவேற்றிய வேளையில் அதன் செயல்பாட்டை தடுத்ததுடன் குழப்பத்தை எற்படுத்தியது அடுத்து சொத்துகளுக்கு அழிவை ஏற்படுத்தியது நிமித்தம் இரு சமூகங்களுக்கிடையில் அமைதியின்மை நிலவியது.

இது தொடர்பாக மன்னார் பொலிசார் எட்டு சந்தேக நபர்களை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஐர்படுத்தியிருந்தனர். இதன் வழக்கு கடந்த 31.07.2017 அன்று நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐ முன்னிலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது சந்தேக நபர்கள் சார்பாக ஆஐராகிய சட்டத்தரணிகள் தங்கள் பக்க சார்பான வாதங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து கரிசல் பள்ளிவாசல் இரு நிர்வாக சபை உறுப்பினர்களாக இருக்கும் இருவரையும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிபதி உத்தரவுட்டதுடன் ஏனையோரை விளக்கமறியலில் வைக்கும்படி கட்டளை பிறப்பித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ஏனையோரின் பிணைக்காக விண்ணப்பிக்கப்பட்டதின் தொடர்பாக கட்டளைக்காக கடந்த  04.08.2017 ஆம்  வரை இவ் வழக்கை அன்று ஒத்திவைத்தார்.

இதற்கமைய இவ் வழக்கின் பிணை விண்ணப்பத்துக்கான கட்டளைக்காக  வெள்ளிக்கிழமை (04.08.2017) இவ் வழக்கு அழைக்கப்பட்டபோது சந்தேக நபர்கள் சார்பாக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியும் சட்டத்தரனி திருமதி கே.சிவபாதசுந்தரம், சிரேஷ;ட சட்டத்தரனி எம்.எம்.சபூர்தீன், எம்.ஏ.எம்.முபாரக் ஆகியோரும் வழக்காளி சார்பாக சிரேஷ;ட சட்டத்தரனிகளான அன்ரன் புனிதநாயகம், செபநேசன் லோகு இவர்களுடன் சிராய்வா ஆகியோரும் மன்றில் ஆஐராகியிருந்தனர்.

சென்ற தவனையின்போது சந்தேக நபர்கள் சார்பாக ஆஐராகிய சட்டத்தரனிகள் பிணை மனுத்தாக்கல் செய்திருந்தபொழுது அதற்கான கட்டளை நேற்று வெள்ளிக்கிழமை (04.08.2017) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐ வழங்கியபோது
கடந்த தவனையின்போது இவ் வழக்கு விசாரனைக்கு எடுத்தபோது சந்தேக நபர்களை பிணையில் விடுவிப்பது சம்பந்தமாக அன்று காலையில் பொலிசார் இன்னும் விசாரனைகள் முடிவு பெறவில்லையெனவும் இதனால் இவர்களை பிணையில் விடுவிப்பதை கடுமையாக ஆட்சேபித்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

பின் இவ் வழக்கு அன்று பிற்பகல் வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் விசாரனைக்காக அழைத்தபோது இது சம்பந்தமாக காலையில் ஆஐராகாத வேறு பொலிசார் மன்றில் ஆஐராகி சந்தேக நபர்களில் ஒருவரைத் தவிர ஏனையோரை பிணையில் விடுவிப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லையென தெரிவித்திருந்தனர்.

ஒரே நாளில் அதுவும் குறுகிய நேரத்தில் பொலிசார் பிணை சம்பந்தமாக வேறுபட்ட கருத்துக்களை மன்றில் முன்வைத்ததைப் பார்க்கும்போது சந்தேக நபர்கள் பொலிசில் செல்வாக்கு மிக்கவர்களாக காணப்படுகின்றார்கள் என்பது புலனாகிறது.
அடுத்து இவர்கள் பிணையில் விடுவிக்காது போனால் சமாதான குழைவு ஏற்படும் நிலை உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சந்தேக நபர்கள் சார்பாக ஆஐராகிய சட்டத்தரனிகளின் சட்ட வாதத்தில் முன்வைக்கப்பட்டதைப் பார்க்கும்போது அது நீதிமன்றத்தையே அச்சுறுத்துவதான கோரிக்கையாக தெண்படுகிறது.

ஆகவே இவற்றையெல்லாம் நோக்கும்போது இவர்களை பிணையில் விடுவிக்கப்பட்டால் பெரிய சமாதான சீர்குழைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதுடன் விசாரனைக்கு இவர்கள் ஒத்துழைப்பார்களா என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது என மன்று கருதுவதால் பிணை விண்ணப்பத்தை நிராகரிப்பதாக தெரிவித்த நீதிபதி விரும்பின் நீங்கள் மேல் நீதிமன்றம் சென்று பிணை எடுத்துக் கொள்ளலாம் என கட்டளையிட்டதுடன்
இவ் வழக்கில் முதலாவது சந்தேக நபர் வயது முதிர்ந்தவராகவும் சுகவீனமுற்றவராகவும் இருப்பதாக தெரிவிக்கப்படுவதால் இவரை ஐந்து லட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் ஏனையோர் ஐந்து பேரையும் எதிர்வரும் 14.08.2017 வரை விளக்கமறியலில் வைக்கும்படி கட்டளை பிறப்பித்தார்.

இவ் கட்டளை பிறப்பித்ததுடன் நீதிமன்ற கட்டிட பகுதிக்குள் யாராவது சத்தங்கள் போட்டு சட்ட விரோதமாக செயல்படா வண்ணம் கவனிக்கும்படி நீதவான் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து பொலிசார் நீதிமன்ற நுழை வாயிலில் பலத்த பாதுகாப்பு கடமையில் ஈடபட்டபோது விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபரின் சகோதரி ஒருவர் நீதிமன்ற நுழை வாயிலுக்கு முன்னால் கொழுத்திய வெயிலிலும் நிலத்தில் உட்கார்ந்த நிலையில் புலம்பிக் கொண்டிருந்த வேளையில் பொலிசார் அவளை அவ்விடத்திலிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.அத்துடன் அப்பகுதியில் கூட விடாது வழக்குகள் அற்றவர்களை பொலிசார் வெளியேற்றினர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *