அதிகாலை ஆலங்குடாவில் இருந்து ஒயா மடுவ பகுதியின் ஊடாக மன்னார் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் பல மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
இன்று காலை மூன்று இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளாதாகவும், இதன் காரணமாக அதிகமான முதீயோர்கள்,அரசாங்க ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இன்னும் பலர் மிகவும் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளார்கள்.
இவ்வாறு முழுமையாக பாதிக்கப்பட்ட பஸ்களை நீண்ட தூர போக்குவரத்திற்கு பயன்படுத்துவதை மன்னார் போக்குவரத்துசாலை கவனம் செலுத்த வேண்டும்.
மன்னார் இ.போ.ச முகாமைத்துவத்தில் காணப்படும் அசமந்த போக்கினை சீர்செய்ய உரிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை பயணிகள் முன்வைத்துள்ளார்கள்.