பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் ஆயருக்கும் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் சந்திப்பு

மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த தம்மிக்கவிற்கும் இடையில் இன்று மாலை 6 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.


மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்ற புதிதாக பதவியேற்ற வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த தம்மிக்க ஆயரிடம் ஆசி பெற்றதோடு, மன்னார் மறைமாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் குறித்து கலந்துரையாடினர்.


குறிப்பாக மன்னார் மறைமாவட்ட மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள், மாவட்டத்தின் பாதுகாப்பு நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.


குறித்த சந்திப்பின் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட ஆயரின் செயலாளர் அருட்தந்தை ஆர்.நிக்கிலஸ் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


குறித்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேர் பலியான பரிதாப சம்பவம்!

wpengine

இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு நியூசிலாந்தில் அமோக வரவேற்பு!

Editor

Dr அர்ச்சுனாவை வன்மையாக கண்டித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை..!

Maash