வன்னி நியூஸ் ஊடக பிரிவு
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (4) 7.30 மணி அளவில் ஆரம்பமானது.
இதன்போது இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தேச விடுதலைக்காக போராடி உயிர் நீத்த அனைவருக்கும் இரண்டு நிமிடநேர அமைதி பிரார்த்தனை நடைபெற்றது மேலும் சமாதான புறா ஐதரசன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டன.
தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் சர்வ மதத்தை பிரதிபலிக்கின்ற மதகுருமார்களின் ஆசியுரை நிகழ்த்தப்பட்டு வரவேற்பு நடனம் அரங்கேற்றப்பட்டது.
சர்வமத தலைவர் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு சுதந்திர தின நினைவு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதை தொடர்ந்து இறுதியாக மாவட்ட செயலக வளாகத்தினுள் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூலிகைத்தோட்டம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர், மன்னார் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, மன்னார் மாவட்ட கடற்படை கட்டளை தளபதி, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம உள்ளக கணக்காளர், சமூர்த்தி பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.