பிரதான செய்திகள்

மன்னார் அபிவிருத்தி தொடர்பாக முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக கருத்து தெரிவிக்கும் ஞானப்பிரகாசம்

மன்னார் நகர அபிவிருத்தி தொடர்பாக இன்று (04) காலை மன்னார் நகரசபைத் தலைவர் ஞானப்பிரகாசம் சுரைன் டேவிட்சன் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது பாராளுமன்றத்தையும், நிதியமைச்சரையும், பாராளுமன்றப் பிரதிநிதிகளையும், பொது மக்களையும் பிழையாக வழிநாடாத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும் என்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”2017/2018 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதியொதுக்கீட்டில் மன்னாரில் கடைத்தொகுதிகளையும், பேரூந்து நிலையமொன்றையும் கொண்டதான மன்னார் நகரப்பகுதியின் புனரமைப்பை உள்ளடக்கிய மீள்குடியேற்றச் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக 250 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு நிதியமைச்சர் வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்ததற்கு மாற்றமாக மன்னார் நகரசபையின் வேண்டுகோளின் பேரிலேயே நகர அபிவிருத்தித் திட்ட நிதியினூடாக 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அப்பட்டமான பொய்யையை கூறியுள்ளார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பத்திரத்திற்கமையவே குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட்டிருப்பதற்கான சகல ஆதாரங்களும் இருக்கும் நிலையில் ஊடகவியலாளர்களையும், மக்களையும் பொறுப்பு வாய்ந்த நகரசபையின் முதல்வர் பிழையாக வழிநடாத்தியுள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அடுத்த வருட முற்பகுதியில் உள்ளுராட்சி தேர்தல்

wpengine

வடக்கில் மீண்டும் தொடரும் ஊடரங்கு சட்டம்

wpengine

வசந்த முதலிகே பிணையில் விடுதலை!

Editor