பிரதான செய்திகள்

மன்னார்,முருங்கன் பகுதியில் மின்னல் தாக்கம்!சிறுவன் பரிதாபம்

மன்னார் – முருங்கன் பகுதியில் நேற்று பிற்பகல் மின்னல் தாக்கி சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த தனது தந்தைக்கு, வீட்டில் இருந்து மதிய உணவை எடுத்துச் சென்ற சிறுவனே வயலில் வைத்து மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில், கட்டையடம்பன் கிராமத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் ரஸ்கின் எனும் 11 வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், மின்னல் தாக்கத்திற்கு உள்ளான சிறுவனின் சடலம் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சிறைக்கு சென்ற ஞானசார தேரர்

wpengine

அரச வர்த்தக பொது கூட்டுதாபனத்தின் அனுசரணையோடு புலமை பரிசில் வகுப்பு

wpengine

பேருந்து கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

wpengine