Breaking
Sun. Nov 24th, 2024

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 350 பயனாளிகளுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் நேற்று பிரதேச செயலகங்களினூடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 100 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி தலைமையில் நேற்று  12 மணியளவில் மடு பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டு குறித்த சுயதொழில் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

மடு பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக்கோட்டிற்குற்பட்ட மற்றும் சுய தொழில் முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற நூறு பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்கள் விரும்பிய சுய தொழிலுக்கான உபகரணங்கள் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவில் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 250 பயனாளிகளுக்கு சுய தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  மதியம் 1.30 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் என்.பரமதாசன் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 250 பயனாளிகளில் முதற்கட்டமாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் 15 பயனாளிகளுக்கு சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வுகளில் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜே.பி.கொஸ்தா, ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ. சமீயூ முஹமது பஸ்மி, ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட ஊடக இணைப்பாளர் ஞானப்பிரகாசம் மரியசீலன் உட்பட பயனாளிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *