நகர்புற மாணவர்களுக்கு இலகுவாக கிடைக்கும், இலகுவாக பெறக்கூடிய பதவிகள் அனைத்தும் கிராமப்புற மாணவர்கள், இளைஞர்களுக்கு போராட்டமாக இருக்கின்றது.
அந்த வகையில் மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் படித்து, கடந்த கால யுத்தத்தில் பல இன்னல்களை சந்தித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி சென்று பல்கலைக்கழக படிப்பை சிறப்புற முடித்து, கடின முயற்சியினால் முகாமைத்துவ உதவியாளராக (MA) பணியாற்றி, பின்பு தனது திறமையினால் சமூக சேவை உத்தியோகத்தராக மன்னார், மடு ,முசலி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி (SSO) தொடர்ந்து தனது முயற்சியினாலும் திறமையினாலும் இலங்கை திட்டமிடல் சேவை பரீட்சையில் (SLPS) சித்தியடைந்து, வரும் திங்கட்கிழமை (10.02.2020) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக (ADP) 29-வது வயதில் பொறுப்பேற்க்க உள்ளார்.
எஸ்.ஜெ.வோல்டிசொய்ஸ்சா.
குடும்ப வறுமைக்கு மத்தியிலும் பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் உள்ள பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தில் நேரடியாக படித்து கல்வி ரீதியான பதவிகளில் உயரிய பதவியொன்று வகிக்கும் முதல் நபர் என்ற பெயரை எடுத்து இந்த ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரின் இந்த சாதனையை மடுப்பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் மடு பிரதேச மக்கள் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
