Breaking
Tue. Nov 26th, 2024

மன்னார் – மடு திருத்தள பகுதியில் யாத்திரிகர்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக உயர் மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் மடு திருத்தளத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, இந்திய அராசங்கம் வழங்கும் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மடு திருத்தளத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு யாத்திரிகர்களுக்கான 300 தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, 300 வீடுகள் அமைக்கப்படவுள்ள இடத்தினை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையிலான குறித்த குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

இறுதியாக இந்த வீட்டு திட்டம் அமைக்கும் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் எதிர்வரும் மாதம் 1ஆம் திகதி அடிக்கல் நாட்டி திட்டத்தை ஆரம்பிப்பதாகவும், அதற்கான துரித நடவடிக்கைகளை உரிய திணைக்களங்கள் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கலந்துரையாடலில் , மடு திருத்தள பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை,கிறிஸ்தவ மத விவகார அமைச்சின் பணிப்பாளர் எம்.குனவர்தன, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர், இந்திய துனைத்தூதரகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் டி.சி.மஞ்சுநாத், மடு பிரதேசச் செயலாளர் வி.ஜெயகரன், மன்னார் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எல்.ஜே.றொசான் குரூஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *