பிரதான செய்திகள்

மன்னார்,பெற்கேணி சிறுவனின் மரணத்தில் சந்தேகம்! இன்று உடல் மீட்பு

(இன்பாஸ்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் பெற்கேணி கிராம சேவையாளர் பிரிவில் அளக்கட்டு கிராமத்தில் வசித்துவந்த இரண்டு வயது இஸ்லாமிய சிறுவன் கடந்த 25ஆம் திகதி மரணித்து பெற்கேணி கிராம மக்களினால் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. 

நேற்று காலை சிலாவத்துறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கபெற்ற தகவல்களின் படி இந்த சிறுவன் தாக்கப்பட்டு மரணித்துள்ளார்.என்ற தகவலின் அடிப்படையில் இன்று காலை சட்டப்படி இஸ்லாமிய சிறுவனின் உடல் தோண்டப்பட்டு சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தினால் சோதனைக்கு எடுத்து சென்றுள்ளதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் சிறுவன் தாக்கப்பட்டு இருக்கலாம்,அல்லது வேறு ஏதாவது காரணங்கள் மூலம் சிறுவன் மரணித்து இருக்கலாம் என பலர் சந்தேகம் கொள்ளுகின்றனர்.

Related posts

ஆசிரிய நியமனம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

wpengine

இந்திய வீடமைப்புத் திட்டத்தை விஸ்தரிக்கக்கோரி மெளன விரதம்

wpengine

முசலி பிரதேச ACMC சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்களில் றிசாட் எம் . பி .

Maash