பிரதான செய்திகள்

மன்னார்,பாலைக்குழில் ஆயுதம்! ஏமாந்து போன படையினர்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலைக்குழி கிராமத்திற்கு  செல்லும் பிரதான வழியில் ஆயுத கிடங்கு இருப்பதாக சந்தேகித்து இன்று காலை சிலாவத்துறை பொலிஸ்,கடற்படை,இரானுவம் ஒன்றாக சேர்ந்து சோதனை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் பாலைக்குழி கிராமத்திற்கு செல்லும் பிரதான விதியில் ஆயுத கிடங்கு இருப்பதாக தெரிவித்து முப்படையும் சோதனை மேற்கொண்டார்கள் என்றும் இதுவரைக்கும் எந்த விதமான ஆயுதங்களையும் கண்டுபிடிக்கவில்லை என்றும்,இந்த காணி முஸ்லிம் சகோதர் ஒருவருக்கு சொந்தமான காணி என்றும் தெரிவித்தார்.

இதன் போது முசலி பிரதேச செயலாளர்,மன்னார் நிதி மன்ற நீதிபதி, பொலிஸ் அதிகாரிகள் அங்கு வருகை தந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது போன்று கடந்த வாரம் மன்னார்,வங்காலை கடற்கரை  பகுதியில் சோதனை மேற்கொண்ட போது எந்த விதமான ஆயுதங்களையும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Related posts

மன்னார், தாராபுரம் ரூஹானிய்யா அரபுக் கல்லூரியின் ஆலிமாக்களுக்கான பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக ரிஷாட்!

Editor

யாழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு!

Editor

செட்டிக்குளம் பிரதேச சபையில் தமிழ் பெண்ணை பிரதி தவிசாளர் வழங்கிய றிஷாட்

wpengine