பிரதான செய்திகள்

மன்னார்,கூளாங்குளம் பாடசாலை மாணவர்கள் 3பேர் சித்தி

(முஜீபுர் ரஹ்மான்)

இம்முறை நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மன்னார் முசலிப் பிரதேச கூளாங்குளம் பாடசாலையிலிருந்து 3 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.

இதில் முஜிப் றஹ்மான் என்பவரின் மகன் எம்.ஆர்.அப்துல் அப்னான் 168 புள்ளிகளை எடுத்து முதலாவது இடத்திலும் ஜாபிர் முஹம்மது மற்றும் மஸூது அப்வா ஆகிய இரு மாணவர்களும் 156 புள்ளிகளை எடுத்து இரண்டாம் இடத்திலுள்ளனர்.

பொதுவாக எமது சமூக சிறார்களின் வெற்றிக்காக தொடர்ந்தும் பிரார்த்திக்கின்ற அனைத்து உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விசேடமாக இவர்களுக்கு கல்வி ஊட்டிய ஆசான்கள், அதிபர், அதிலும் விசேடமாக பல சிரமங்களுக்கு மத்தியில் அயராது பாடுபட்ட ஆசிரியை றியாஸ் நஸ்ரின் மற்றும் தனது நேரங்களை ஒதுக்கி பல சிரமங்களுக்கு மத்தியில் கல்வி புகட்டிய ஆசிரியர் றபி அஸ்லம் ஆகியோருக்கு எமது குடும்பம் சகிதம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Related posts

முல்லைத்தீவில் முதல் முறையாக இலங்கை தேசிய புதியவர்கள் பிரிவினருக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டி!

Maash

மஹிந்த பங்காளிக் கட்சிகளுக்கு அவசர அழைப்பு

wpengine

ரணில்,மைத்திரி ஆட்சியில் முஸ்லிம்களின் காணியில் அத்துமீறும் பௌத்த மதகுருக்கள்

wpengine