பிரதான செய்திகள்

மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் புத்திக பத்திரன

கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன நேற்று மாலை மன்னாருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
மன்னாருக்கு வருகை தந்த பிரதி அமைச்சர் மன்னார் – மாந்தை உப்பு கூட்டுஸ்தாபனத்தினை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீனின் வேண்டுகோளுக்கு அமைவாக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

மன்னார் – மாந்தை உப்பு கூட்டுஸ்தாபனத்திற்கு சென்ற பிரதி அமைச்சர் புத்திக பத்திரன அங்குள்ள நிலமையினை நேரடியாக அவதானித்துள்ளார்.

மேலும் உப்பு கூட்டுஸ்தாபனத்தின் முகாமையாளர் உட்பட அதிகாரிகளை சந்தித்து உரையாடியதோடு, அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

Related posts

உலக வன ஜீவ ராசிகள் தினம் 5ஆம் திகதி உடவலையில் அனுஸ்டிப்பு

wpengine

உதா கம்மான (கிராம எழுச்சி) வெலிஓயாவில் ஆரம்பித்து வைத்த சஜித்

wpengine

மஹிந்தவுக்கு ஆதரவான பிக்குகளின் சத்தியாக்கிரகம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!

wpengine