பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் 24 மணி நேரம் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் முடக்கம்-

மன்னாரில் பட்டித்தோட்டம் மற்றும் பெரிய கடை கிராமம் 24 மணி நேரம் முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் அவர்களினால் மேலும் 24 மணி நேரம் மன்னார் பட்டித்தோட்டம் மற்றும் மன்னார் பெரிய கடை ஆகிய இரண்டு கிராமங்களும் முடக்க நிலைக்கு கொண்டு வருவதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் குறித்த இரு கிராமங்களும், இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் நாளை திங்கட்கிழமைமாலை 6 மணி வரை முடக்க நிலையில் இருக்கும்.

-உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இலங்கை அரச போக்கு வரத்து சேவை பேரூந்துகள் போக்கு வரத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
-முதலாவது போக்கு வரத்து சேவையானது மன்னார் ஆயர் இல்ல வீதியில் இருந்தும்,இரண்டாவது போக்கு வரத்து சேவையானது மன்னார் டெலிக்கொம் சந்தியில் இருந்தும் காலை 8 மணிக்கு இடம் பெறும்.

-எனவே உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமது போக்கு வரத்து சேவைகளை குறித்த போக்கு வரத்து சேவைகள் ஊடாக மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மன்னார் வைத்தியசாலைக்கு செல்லுவோரின் கவனத்திற்கு

wpengine

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் ஆதரவாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர்

wpengine

உக்ரைன் யுத்தம்! பங்களாதேஷ்சில் எரிபொருள் விலை 50% உயர்

wpengine