பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் வெலிபர பகுதியில் கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்ட சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான தம்மென்னா மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இருபது பொட்டலங்களில் கவனமாக பொதி செய்யப்பட்டு கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்டிருந்த 49 கிலோ 380 கிராம் கேரள கஞ்சா கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சா கையிருப்பு தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

சாஹிரா கல்லூரியின் பரிசளிப்பு! பிரதமர் பங்கேற்பு

wpengine

பதில் கடமையாற்றும் அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை

wpengine

அமெரிக்க ஜனாதிபதி கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

wpengine