பிரதான செய்திகள்

மன்னாரில் 1ஆம் திகதி மரநடுகை வடமாகாண அமைச்சர் சிவநேசன்

வடமாகாண மரநடுகை மாதம் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம் சிவபுரம் கிராமத்தில் எதிர்வரும் முதலாம் திகதி மாகாண மரநடுகை மாதம் ஆரம்பிக்கப்படும் என வடமாகாண விவசாய அமைச்சர் சிவநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக மாகாண விவசாய அமைச்சு அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் மரநடுகை மாதம் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம் மாதத்தில் மாகாண விவசாய அமைச்சினால் பல்வேறு மரநடுகை செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மாகாண மரநடுகை மாதத்தின் தொடக்க நிகழ்வு எதிர்வரும் 1ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம்- சிவபுரம் கிராமத்தில் நடைபெறும். அதனை தொர்ந்து வடமாகாணத்தில் உள்ள 25 பிரதேச செயலர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு, பிரதேச செயலர் பிரிவில் இருந்து தலா ஒவ்வொரு கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அந்த கிராமங்களில் உள்ள மக்களுக்கு தலா 5 மரக்கன்றுகள் படி வழங்கப்படும்.

அதேபோல் வடமாகாண அரச திணைக்களங்களுக்கும், கோரிக்கை விடுக்கப்பட்டால் தனியார் நிறுவனங்களுக்கும் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்படும். இதன்படி பழ மரக்கன்றுகள், நிழல் தரும் மரக்கன்றுகள் வழங்கப்படும்.

அதேபோல் பாடசாலை மாணவர்களுக்கிடையில் மரநடுகை மாதம் தொடர்பாக கவிதை போட்டிகள், கட்டுரை போட்டிகள் நடத்தப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேசிய ஷூரா சபை அரசியலமைப்பு தொடர்பான தமது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது

wpengine

அரச ஊழியர்களுக்கு எதுவும் செய்யாத அரசு! தகுந்த பதிலடியை அரச உத்தியோகத்தர்கள் கொடுக்க வேண்டும்

wpengine

வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள் நான்கு பேரின் பணித்தடையை நீக்கக்கோரி கடிதம்.

wpengine