பிரதான செய்திகள்

மன்னாரில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு! மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில் இன்று(25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த கொலையினைக் கண்டித்து மன்னாரிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

பூரண ஹர்த்தால் காரணமாக மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மீனவர்கள் எவரும் கடற்றொழிலுக்குச் செல்லவில்லை.

தனியார் பேரூந்துகள் தமது போக்குவரத்து சேவைகளை முழுமையாக நிறுத்தியுள்ளனர். எனினும் இலங்கை போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பேரூந்துகள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சேவைகளில் ஈடுபட்டு வருகின்றது.14695567_320327488341722_2466083290447147947_n

 14600855_320327371675067_3517304972184138284_n

Related posts

திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

wpengine

பாலியாற்று அரைக்கும் ஆலையினை பார்வையிட்ட பா.டெனிஸ்வரன்

wpengine

யோஷித்த ராஜபக்ச மோதல்! பொலிஸ் விசாரணை

wpengine