பிரதான செய்திகள்

மன்னாரில் வெண்பா பணி மூட்டம்! பலருக்கு அசௌகரியம்

மன்னார் பெரு நிலப்பரப்பில் என்றும் இல்லாதவாறு ‘வெண்பா’ பனி என அழைக்கப்படும் பனி படலம் கடந்த சில வாரங்களுக்கு மேலாக அதிகரித்து காணப்படுகின்றது.
இதனால் கடற்தொழிலுக்கும் மற்றும் அலுவலகம் , பாடசாலைக்கு செல்பவர்கள் குறித்த வெண்பா பனி படலத்தினாலும், அதீத குளிர் காரணமாகவும் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முழுமையாக காணப்படுகின்ற போதிலும்,மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார்-யாழ் பிரதான வீதி,மன்னார்-மதவாச்சி பிரதான வீதி மற்றும் மன்னார்-நானாட்டான் பிரதான வீதி போன்ற பகுதிகளில் குறித்த பணிப்பொழிவு அதிகரித்து காணப்படுகின்றது.

காலை 5 மணி தொடக்கம் 8 மணிவரை குறித்த பணிப்பொழிவு அதிகரித்து காணப்படுகின்மையினால் சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவன தலைவராக ஹம்ஜாட் அமைச்சர் நியமனம்

wpengine

மஹிந்த பங்காளிக் கட்சிகளுக்கு அவசர அழைப்பு

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திருத்தச்சட்ட வரைபு

wpengine