பிரதான செய்திகள்

மன்னாரில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன விடுதலை புலிகளின் ஆயுதங்களா? சந்தேகம்

மன்னார், சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று மாலை வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் உள்ள பற்றைக்குள் மர்மமான இரண்டு பொதிகளை அவதானித்த நபர் ஒருவர் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதிகளை பார்வையிட்டதோடு, சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர் குச்சுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து வெடிப்பொருட்கள் படையினரினால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

Related posts

சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை பரப்பிய சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியல்

wpengine

மூன்று மாடி பலநோக்குக் கட்டிடம் அடிக்கல் நாட்டிய முன்னால் அமைச்சர்

wpengine

அமெரிக்காவின் வாய்போரினால் தாய்லாந்தில் தஞ்சமடையும் வடகொரியர்கள்

wpengine