மன்னார் மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக 32 ஆயிரத்து 548 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் வறட்சி நிலை காரணமாக வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களும் கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரின் தகவலின்படி,
மன்னார் மாவட்டத்தில் இதுவரை 32 ஆயிரத்து 548 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கென நிவாரண உதவிகளை வழங்குவதற்கென முதற்கட்டமாக 58.5 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் 4 ஆயிரத்து 909 குடும்பங்களும், மடு பிரதேச செயலர் பிரிவில் 3 ஆயிரத்து 986 குடும்பங்களும், மன்னார் பிரதேச செயலர் பிரிவில் ஒன்பதாயிரத்து 167 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் முசலிப் பிரதேச செயலர் பிரிவில் 8ஆயிரத்து 136 குடும்பங்களும், நானாட்டான் பிரதேச செயலர் பிரிவில் 6 ஆயிரத்து 350 குடும்பங்களுமாக சுமார் 32 ஆயிரத்து 248 குடும்பங்கள் இவ்வாறு வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது