Breaking
Mon. Nov 25th, 2024

மன்னார்- பள்ளிமுனை வீதியிலுள்ள பயோபவ் என்ற மரம் மிகவும் பிரபலம் வாய்ந்தது.

7.5 மீற்றர் உயரமும் 19.5 மீற்றர் சுற்றளவும் கொண்ட இந்த மரம், அரேபிய வணிகர்களால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

2003 இல் நடத்தப்பட்ட ஆய்வின் படி, நாட்டில் சுமார் 40 பயோபவ் மரம் எனப்படும் பெருக்க மரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் 34 மரங்கள் மன்னார் பகுதியில் உள்ளன.

பள்ளிமுனையில் உள்ள பெருக்க மரம் சுமார் 800 வருடங்கள் பழமை வாய்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பயோபவ் மரத்தில் காய்கள் காய்க்கத் தொடங்கியுள்ளன. அதன் பழங்களைச் சுவைப்பதற்கு கழுதைகள் தினமும் செல்கின்றன.
அதுமட்டுமின்றி, மன்னாருக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.

அவர்களில் சிலர் பயோபவ் மரத்தைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலை அசுத்தமாக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *