பிரதான செய்திகள்

மன்னாரில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கொடிவார நிகழ்வு ஆரம்பம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடாந்தம் அனுஸ்டிக்கப்படும் கொடி வாரம் இன்று (25) மன்னாரில் ஆராம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராஜா தலைமையில் இடம் பெற்ற ஆராம்ப நிகழ்வின் போது, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிற்கு வைபவ ரீதியாக முதற்கொடி அணிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் கொடி அணிவிக்கப்பட்டது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

குறித்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட சம்மேலனத் தலைவர் சி.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ளாடை அணிய தடை

wpengine

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்குமாறு ஹக்கீம் கோட்டையில் கையெழுத்து.

wpengine

சம்பளத்தை குறைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

wpengine