பிரதான செய்திகள்

மன்னாரில் கடும் மழை! நானாட்டான் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

மன்னாரில் பெய்த கடும் மழையின் காரணமாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. நானாட்டான், உயிலங்குளம் பிரதான வீதியில் உள்ள வங்கி ஒன்றிற்கு முன்பாக காணப்பட்ட பாரிய மரம் ஒன்று வேருடன் சரிந்து
விழுந்துள்ளது.

சம்பவத்தின் போது, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் உயிலங்குளம் பிரதான வீதியின் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் விழுந்து கிடப்பதாக இந்த பகுதி மக்கள் நானாட்டான் பிரதேச சபையினருக்கு தெரிவித்துள்ளனர்.

இதன்போது விரைந்து செயற்பட்ட நானாட்டான் பிரதேச சபை செயலாளர் மற்றும் பணியாளர்கள் மரத்தை வீதியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், பாதையின் போக்குவரத்து செயற்பாடுகளை உடனடியாக சீர் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

தனுஷ்கோடி – தலைமன்னாருக்கு இடையே பாலம் அமைக்க முயற்சி

wpengine

நாளை முதல் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை! ராஜாங்க அமைச்சர்

wpengine

ACMC மற்றும் SJB உடன்படிக்கையில் தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு.

Maash