Breaking
Sun. Nov 24th, 2024

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் இணைக்கும் நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ளதுடன் அவ்வாறு அவர் அபிவிருத்திக்குழுவில் இணைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டது எனவும் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதியும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக உள்ளபோது, றிசாத் பதியுதீனையும் நியமிக்கவேண்டிய அவசியம் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பனிச்சையடி அருள்மிகு வீரம்மாகாளியம்மன் ஆலயத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பத்திரகாளியம்மன் ஆலய திறப்பு விழா நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

துரதிஸ்டவசமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு அபிவிருத்திக்குழு தலைவர்கள் உள்ளனர்.இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள்.அவர்களில் மூன்று சகோதர இனத்தை சேர்ந்தவர்களும் ஒரு தமிழரும் உள்ளனர்.75வீதமுள்ள தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதி.25வீதமுள்ள சகோதர இனத்தவர்களுக்கு மூன்று பிரதிநிதிகள் உள்ளனர்.

ஆனால் தற்போது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தனது பிரதிநிதியொருவரை இங்கு அனுப்பவுள்ளது.வெளிமாவட்டத்தில் உள்ள அமைச்சர் றிசாத் பதியதீன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் இணையவுள்ளார் என்ற செய்தி எங்களுக்கு கிடைத்துள்ளது.இதனை வன்மையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்ட மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இங்கு உள்ளனர்.அந்த கட்சியை சேர்ந்தவர்களும் இங்கு உள்ளனர்.மன்னாரை சேர்ந்த றிசாத் பதியுதீன் வந்து இங்கு எமக்கு அபிவிருத்திசெய்ய தேவையில்லை.அவர் அமைச்சராக இருந்துவருகின்றார்.அவர் இலங்கைக்கான அமைச்சராகவுள்ளார்.தனது ஒதுக்கீடுகள் மூலம் இந்த மாவட்டத்திற்கு எதனையும் செய்யவிரும்பினால் செய்யலாம்.அதற்காக மாவட்ட அபிவிருத்திக்குழுவின் கூட்டத்தில் பங்குகொண்டு ஆலோசனை வழங்குவதற்கு அனுமதிக்கமுடியாது.

இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிறைவான ஆதரவினை வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் அதனை நாங்கள் வன்மையாக எதிர்க்கின்றோம்.அந்த எதிர்ப்பினை வெளிக்காட்ட தயாராகவும் இருக்கின்றோம்.இது தொடர்பில் சம்பந்தன் ஐயாவின் கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ளோம்.yokas

அமைச்சர் றிசாத்பதியூதின் இங்குவந்து மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக செயற்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.yokas01

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *