மன்னார் – மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியின் உள் வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று மதியம் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரியபண்டிவிரிச்சான் உள் வீதியில் கட்டுப்பாட்டை மீறி முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் சாரதி உட்பட முச்சக்கரவண்டி பயணம் செய்த இருவருமே காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.