பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரிற்கு திடீர் விஜயம் மஹிந்த

-மன்னார் நிருபர் லெம்பட்-

தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (13) காலை மன்னாரிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய, மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜே. ஜெனிற்றனுடன் கலந்துரையாடினார்.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்றாஸ் மற்றும் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான வாக்கு வீத அதிகரிப்பை ஊக்கு விக்கும் வகையில் இடம்பெற்ற வீதி நாடகத்தில் தேர்தல் ஆணைக்குழு தலைவர் கலந்து கொண்டார்.

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் காலை 10.15 மணி அளவில் குறித்த வீதி நாடம் இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக குறித்த வீதி நாடகம் இடம்பெற்றது.

Related posts

உள்ளூராட்சி தேர்தல்! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

wpengine

மஹிந்த ராஜபக்ஷ உடல்நிலையில் நலமாக இருக்கின்றார் – நாமல் ராஜபக்ஷ

Maash

சிங்கராஜவனத்தை பாதுகாக்க V-FORCE தன்னார்வத் தொண்டர் படையணி

wpengine