பிரதான செய்திகள்

மன்னாரின் இயல்பு நிலை மூன்றாவது நாளாகவும் பாதிப்பு

நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து மன்னாரின் இயல்பு நிலை மூன்றாவது நாளாக இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு
மன்னாரில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இன்று மன்னாரில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களுக்கு முன் கறுப்புக் கொடி ஏற்றி பூரண ஹர்த்தால்
அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையங்களுக்கு முன் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் முப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் போக்குவரத்துக்கள் வழமைபோல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காத்தான்குடி நகர சபை,பிரதேச சபை தொடர்பான கலந்துரையாடல்

wpengine

சவுதி அரேபியாவின் எண்ணெய்வள அமைச்சர் பதவி நீக்கம்

wpengine

தெற்கு ஊடகவியலாளா்கள் – முதலமைச்சா் விக்னேஸ்வரன் சந்திப்பு

wpengine