Breaking
Sun. Nov 24th, 2024

பொலன்னறுவை மன்னம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்தில் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து மோதி ஓடைக்குள் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக பதிவானது.

மேலும் 41 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கதுருவெலயில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த இந்த பேருந்து கொட்டாலியா ஓயாவில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து , ஓடையில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதுடன், காயமடைந்த 41 பேர் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பேரூந்து விபத்தில் உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் சம்பவம் தொடர்பில் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்.

“கதுருவெலயிலிருந்து கல்முனைக்கு பேருந்து பயணிக்கவிருந்தது. சுமார் 50 பேர் இருந்தனர். சுமார் பத்து பேர் நின்றிருந்தனர். 7.30 மணியளவில் பேருந்து புறப்பட்டது. மின்னல் வேகத்தில் பயணித்தது. பாலத்தை நெருங்கும் போது திடீரென நின்ற பேருந்து பின்னர் ஆற்றில் விழுந்தது. நான் ஜன்னல் ஓரத்தில் இருந்தேன். நான்தான் முதலில் வெளியே வந்தேன். பலர் மயக்கமடைந்திருந்தனா். 5 முதல் 10 நிமிடங்களில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததனர்.  என கூறினார்.

எனினும், இந்த பேருந்துக்கு பயணிகள் போக்குவரத்துக்கான முறையான உரிமம் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்ட சட்டரீதியற்ற அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி இவர்கள் பேருந்தினை செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

A B

By A B

Related Post