செய்திகள்பிரதான செய்திகள்

மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் பிணையில்.

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளராக செயற்பட்ட ஷான் யஹம்பத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷண கெக்குணவல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா ரூ. 2.5 மில்லியன் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.

Related posts

நிவாரணப் பொதியை லங்கா சதொச நிறுவனத்தில் இருந்து 3998 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும்.

wpengine

வருமானம் பெறும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம்

wpengine

துப்பாக்கிச் சூடு சம்பவம், சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ள போலீசார்.

Maash