கட்டுரைகள்பிரதான செய்திகள்

மனித உரிமைகளின் வரலாறு

FAROOK SIHAN

மனித உரிமைகளின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கியது எனலாம். மனித உரிமை பற்றிய கருத்துக்கள் 1789ல் ஏற்பட்ட பிரான்சிய புரட்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பிரான்சிய அரசியலமைப்புக்குள்ளும். அமெரிக்க புரட்சியுடன் முன்வந்த தோமஸ் ஜெபர்சனினால் வரையப்பட்ட 1776-7ல் அங்கீகரிக்கப்;பட்ட அமெரிக்க சுதந்திர சாசனத்தினுள்ளும், மனித உரிமைகள்  உரிமைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன. அதே போல், பிரித்தானியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘மக்னாகாட்டா’ ஒப்பந்ததும், சிரேஸ்ட சுதந்திர கருத்தியல்வாதியான ஆப்ரஹாம் லிங்கனினால் முன்வைக்கப்பட்ட சமத்துவம் தொடர்பான கருத்தியலும் மனித உரிமைகள் தொடர்பான முக்கிய கடமையாற்றியுள்ளது.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும் வெற்றி பெற்ற நாடுகள் 1945ல் உக்ரேனில் யால்டா மாநாட்டில் கலந்து கொண்ட போது, உலக சமாதானத்தைப் பாதுகாக்க தவறிவிட்ட சர்வதேச சங்கத்தின் இடத்தில் வேறொரு புதிய அமைப்பொன்றை அமைக்க முன்வந்தன. இந்த அமைப்புத்தான் ஐக்கிய நாடுகள் சபையாகும்.  இது தோன்றியதிலிருந்து சர்வதேச மனிதஉரிமைகள் தொடர்பான முக்கிய கடமையாற்றியுள்ளது.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும் வெற்றி பெற்ற நாடுகள் 1945ல் உக்ரேனில் யால்டா மாநாட்டில் கலந்து கொண்ட போது, உலக சமாதானத்தைப் பாதுகாக்க தவறிவிட்ட சர்வதேச சங்கத்தின் இடத்தில் வேறொரு புதிய அமைப்பொன்றை அமைக்க முன்வந்தன. இந்த அமைப்புத்தான் ஐக்கிய நாடுகள் சபையாகும்.  இது தோன்றியதிலிருந்து சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் முக்கியமான பங்கை வகித்து வருகின்றது. மூன்றாம் உலக மகா யத்தம் ஒன்றினைத் தடுக்கும் நோக்கில் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கிய இலக்காக மனித உரிமைகளுக்கு கௌரவம் என்பதாகும்.

மனிதன் ஒரு உயிராக இருப்பதனால் அவனுக்கு வாழும் உரிமை உண்டு. மனித உரிமைகள் என்றால் எல்லா மனிதர்களுக்கும் உரிய அடிப்படையிலான உரிமைகளையும், சுதந்திரங்களையும் குறிக்கின்றன. ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றை மனித உரிமைகள் எனக் கருதலாம். இவற்றில் அடிப்படைத் தேவைகளான நீர், உணவு, உறைவிடம் போன்றவற்றுடன் கொலை செய்யப்படாமலும். சித்திரவதை செய்யப்படாமலும். அவமதிக்கப்படாமலும்  வாழ்வதற்கான உரிமையும் இதில் உள்ளடக்கப்படுகிறது.

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்

மானிடக் குடும்பத்தினர் உள்ளார்ந்த கௌரவத்தையும், அவர்களின் சமமான, பிரிக்க முடியாத உரிமைகளையும் அறிந்து ஏற்பதே உலகில் சுதந்திரம், நீதி மற்றும் சமாதானத்தின் அடித்தளம் ஆகும்’ என சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரை எடுத்துக் கூறுகிறது.  

இதனடிப்படையில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் 1948 டிசம்பர் 10ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் கொண்டு வரப்பட்டது.மனித உரிமைகள் உலகளாவியவை. அதாவது யாவருக்கும் கிடைப்பவை. இந்தக் கொள்கைதான் முதன் முதலில் வலியுறுத்தப்பட்டது. மனித உரிமைகள் என்ற கருத்தாக்கம் சட்டபூர்வமாக்குமாறு உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கவேண்டிய உரிமைகளையும், சலுகைகளையும் வரலாற்றில் முதன் முறையாக 30 உறுப்புரைகளைக் கொண்ட இந்த ஆவணம் எழுத்து வடிவில் பதிவு செய்தது. மனித உரிமைகள் எல்லா மனிதர்களுக்கும் உரியவை என்ற சிந்தனை நாடுகள் அல்லது பிரதேசங்களின் அரசியல் அந்தஸ்து வேறுபாடின்றி இதனைச் பரவச் செய்ய வேண்டும் என கையெழுத்திட்ட உறுப்பு நாடுகளுக்கு பொதுச் சபையினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

‘உலகில் நிலவும் சுதந்திரம், நீதி மற்றும் சமாதானம் என்பவை குறித்த அடிப்படை மனித குலத்தைச் சேர்ந்த சகலரினதும் கௌரவம் மற்றும் பராதீனப்படுத்த முடியாத உரிமைகளின் அங்கீகாரமாகவிருப்பதால் என்று ஆரம்பிக்கின்றது. இதன் மூலம் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் உள்ளடக்கமும், நோக்கமும், மனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலட்சியமும் புலனாகின்றது. இவ்வருடத்திற்கான கருப்பொருளாக சகலரும் மனிதர்கள், சகலரும் சமமானவர்கள் என்பதாகும்.

மானிடக் குடும்பத்தின் உறுப்பினர்களின் உள்ளார்ந்த கௌரவத்தினையும் அவர்களின் சமமான பிரிக்க முடியாத உரிமைகளையும் சுதந்திரம், நீதி, சமாதானம், இவற்றின் அடித்தளமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை இந்தப் பிரகடனத்தை ஏற்ற போது 48 நாடுகள் உடன்பாடாக வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிக்கவில்லை. மனித உரிமைகளில் நல்வாழ்க்கைக்கும், விடுதலைக்குமான உரிமை, பேச்சுத் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் சட்டத்தின் முன் சமத்துவம் போன்ற குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகளும் அடங்கியிருக்கின்றன. அத்துடன் கலாச்சார செயற்பாடுகளில் பங்கெடுத்தல்.வேலைக்கான உரிமை, கல்விக்கான உரிமை  உட்பட சமூக பொருளாதார கலாச்சார உரிமைகளும் இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இனஞ்சார், மதஞ்சார் மற்றும் மொழிசார் சிறுபான்மையினரைச் சேர்ந்த ஆட்களின் உரிமைகள் சம்பந்தமாக குடியியல், மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய  சர்வதேச சமவாயத்தில் 27ம் உறுப்புரையின் ஏற்பாடுகள் கூறுகிறது. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் இன ரீதியான வேறுபாடுகள் காட்டப்படக்கூடாது என கூறுகிறது. இனம், பால், நிறம், போன்ற பலவற்றின் அடிப்படையி;ல் வேறுபடுத்தி நோக்குதலை இது தடைசெய்கிறது. அதாவது வேறுபடுத்தி நோக்காத கோட்பாட்டின் அடிப்படை சமத்துவக் கோட்பாடாகும். இதனைத்தான் மனித உரிமைகள் பிரகடனத்தில் முதலாவது உறுப்புரை ‘தகுதிகளிலும், உரிமைகளிலும் எல்லா மனிதர்களும் சமமாகவும், சுதந்திரமாகவுமே பிறக்கிறார்கள்’ என கூறப்பட்டுள்ளது.  மனித உரிமைகள் யாவும் ஒன்றிற்கொன்று நெருக்கமானவை. ஒன்றையொன்று சார்ந்தவை. ஓர் உரிமையை மேம்படுத்துவது பிற உரிமைகளையும் மேம்படச் செய்யும்.  அதே போல் ஓர் உரிமையை மறுப்பது பிற உரிமைகளையும் எதிர்மறையாக பாதிக்கிறது.

மனித உரிமை மீறல்கள்

அனைத்துலக மனித உரிமைக் பிரகடனங்களி;ல் உள்ள விடயங்களை அல்லது சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களையோ எந்த அரசோ அல்லது தனி மனிதரோ, குழுவோ அவமதி;த்து மீறும் போது மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறான மனித உரிமைகள் மீறப்படும் போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு  அல்லது அவர்களால் நியமி;க்கப்பட்ட சபைக்கு மட்டுமே எந்த உரிமை மீறப்பட்டுள்ளன என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் தார்மீகப் பொறுப்பு உள்ளது. இந்த வகையில் மனித உரிமை மீறல்களை ஐக்கிய நாடுகள் குழுக்கள், தேசிய நிறுவனங்கள், அரசாங்கங்கள், சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சித்திரவதைக்கு எதிரான உலக நிறுவனம் கருத்துப் பரிமாற்றத்திற்கான சர்வதேச அவை  போன்ற பிரபல்யமானவர்கள் கண்காணிக்கின்றனர் மட்டுமன்றி அவற்றினை ஆவணப்படுத்துகின்றனர்.  அதன்பின் மனித உரிமைச் சட்டங்களை மதிக்குமாறும், அமுல்படுத்துமாறு அந்தந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

ஆக்கிரமிப்பு போர்கள், போர் குற்றங்கள், இனப்படுகொலை உள்ளிட்ட மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை சர்வதேச மனிதாபிமானச் சட்டத்திற்கு எதிரானவை.  இவைகள்தான் மனித உரிமைகள் மீறல்களில் மிகக் கடுமையானதாகும் என்பதால் பொறுப்புடன் கையாள வேண்டிய தேவை அனைவருக்கும் இருக்கிறது.

அப்துல் அஸீஸ், பிராந்திய இணைப்பாளர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கல்முனை.

Related posts

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை தான் விரும்பவில்லை.

wpengine

Dematagoda Kahiriya Girl School 4 floors building opend ZAM REFAI Haj

wpengine

விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்! (கடைசி நிமிட வீடியோ)

wpengine