கட்டுரைகள்பிரதான செய்திகள்

மனச்சாட்சிக்கு மௌனமே இலஞ்சம்

(Fahmy Mohamed-UK)

பிச்சைக்காரனின் தட்டுப் பாத்திரத்தில் திருடுகின்ற கதையானது அண்மையில் பிரதேச செயலகத்தார் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார,ஊக்குவிப்பு மற்றும் வீடமைப்பு உதவிகளில் அரசியல்/அரசஅதிகாரிகளின் பணமோகம்!

தவறு நடப்பதாக கூறுகின்றவனையே குற்றவாளியாக சித்தரிக்கும் சமூகம்!
தப்பு யார்தான் செய்யவில்லை என்று தப்புக்கு கடிவாலமாக சமூகம் தன்னை வைத்துள்ளது.

மலேசியப் பிரதமரின் திறமையை பாராட்டும் முகநூல் ஐம்பவான்கள்,ஊரில் எத்தனையோ ஊழல்,மோசடி நடந்துள்ளதைப் பேச முடியாமல் தான் சார்ந்த அரசியலால் வாய்மூடிகளாக உள்ளனர்.

ஒருமுறைதான் இலஞ்சம் வழங்கப்படுகிறது/அரசாங்கப் பணத்தையே திருடுகிறோம் என்ற மன இச்சைக்கான நியாயத்தை முன்வைக்கிறோம்.

நமக்குத் தெரியாமலே நாமாகவே ஊழல்வாதிகளை உருவாக்குகிறோம்.இது புற்றுநோயாக மாறி அரசியல்வாதியும்,அவரின்அடிவருடிகளும் செய்தால் தப்பில்லை என்ற ஈமான் வளர்ந்துள்ளது.

திருடனை பிடிக்கச் சென்றவர்கள் திருட்டுப் பட்டம் வழங்கப்படுகின்றனர்.சமூகத்தின் யதார்த்தத்தை எழுதுபவர்களை பயமுறுத்தவும்,கேவலப்படுத்தவும் முகநூளில் பலர் வேளைவழங்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றனர்.

தற்போதைய ஆட்சியில் பணப்புழக்கம் கணிசமானளவு குறைந்துள்ளது.முன்னர் உழைத்தவர்களுக்கு ஆப்பு.இதனால் ஏழைமக்களுக்கு வழங்கப்படுவதைக் கூட பறித்தெடுக்கின்றனர்.

மனச்சாட்சியுள்ள இளைஞர்களே!!ஊரில் தற்போது பல இளைஞர்கள் ஊரில் நடக்கின்ற இலஞ்ச,ஊழல் மற்றும் சமூக சீர்கேடுகளுக்கு எதிராக களத்தில் உள்ளனர்.அவர்களை ஊக்கப்படுத்துவோம்.சிலருக்கு உயிர் அச்சுறுத்தல் கூட விடுக்கப்பட்டுள்ளது.ஆகவே கட்சி /அரசியல்/விசுவாசம் என்பதற்காக உங்கள் மனச்சாட்சிகளை மௌனமாக்க வேண்டாம்.

இளைஞர்கள் முகநூளில் கருத்து மோதல்களில் உள்ளனர்.பெண்கள் வீட்டில் சீரியல் பார்ப்பதில் ஆர்வமாக உள்ளனர்.வயோதிபர்கள் முச்சந்திகளில் ஆளுக்கொரு திசையாக நாட்டாமை செய்கின்றனர்.

இந்த அசமந்தப் போக்கினை சாதகமாக்கி அரசியல்தலமைகளும்/சில அதிகாரிகளும் உழைப்பதில் போட்டியாக உள்ளனர்.

துப்பாக்கி வைத்திருப்பவன் சமூகத்தின் அநீதிகளை சுட்டிக்காட்டி எழுதபவனை நக்கலாக பேசுகின்ற சுத்தமற்ற சூழலில் வாழ்கிறோம்.

கருத்து மோதல்களை உருவாக்கி,சமூக ஒற்றுமையை தூரமாக்கி நிற்கிறோம்.பள்ளிவாசல்களையும் கொள்கைகளுக்காக பிரித்துக்கொண்டோம்.

கருத்துக் கூறுபவனையும்,சீர்சிருத்த இளைஞர்களையும் கட்சிச்சாயம் பூசி துரோகிகளை வளர்க்கிறோம்.வார்த்தைகளால் உண்மையைக் கூறமுடியாமல் மனதுக்குள் புதைத்து விடுகிறோம்.

நல்ல கருத்துக்களுக்கு பின்னோட்டம் விட்டால் பலருக்கு விளக்கம் கொடுக்க வேண்டி உள்ளது.இந்த நிலையில் முற்போக்கான செயற்பாடுகள் மிகவும் கடினமாகும்.

ஊரில் கண்முன்னே நடக்கின்ற அநீதிகளை தட்டிக் கேட்கவோ/மக்கள் முன் பேசவோ முடியாமல் நாமே நம்மை மௌனமாக்கி உள்ளோம்.நமது மனச்சாட்சிக்கு மௌனத்தை இலஞ்சமாக்கி வாழ்கிறோம்.

இறைச்சிக்கடையிலும்,டேஸ்ட் கடையிலும் மட்டுமே சமூக ஒற்றுமை காணப்படுகிறது.

Related posts

Update இர்பான் தொடர்பான பிந்திய தகவல்கள்

wpengine

பௌத்தர்களின் உரிமைகளை பாதுகாக்க பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய

wpengine

அடையாளம் தெரியாத வெளிநாட்டவர்களினால் யோஷிதவுக்கு எதிரான ஆதாரங்கள் அழிப்பு நடவடிக்கை

wpengine