பிரதான செய்திகள்

மத வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை

இலங்கையில் அனைத்து மத வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்கு இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பரவும் கோவிட் வைரஸ் பெருந்தொற்று நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மத வழிபாட்டு இடங்களில் ஒரே நேரத்தில் 25 பேர் மாத்திரமே வழிபாட்டில் ஈடுபட முடியும் எனவும் சுகாதார பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,இலங்கையில் கோவிட் வைரஸின் மூன்றாவது அலையின் தாக்கம் மிகவும் மோசமான கட்டத்தை அடைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில்,நாட்டில் கடந்த சில தினங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இனவாதத்தை தடுக்க சாணக்கிய தலைவர் ஹக்கீம் எடுத்த காத்திரமான நடவடிக்கை என்ன?

wpengine

சு.க.வின் பிளவுக்குக் காரணம் பிரதமரா?

wpengine

வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு, மேற்குலக நாடுகளின் ஒப்பந்தம்

wpengine