பிரதான செய்திகள்

மத்திய மாகாண பட்டதாரிகளே! இது உங்களின் கவனத்திற்கு

மத்திய மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் ஒன்றிற்கான உறுதி மொழிகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பட்டதாரிகளின் தகவல் சேகரிப்பு இடம்பெறுகின்றன.

இதனை மத்திய மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரிகள் பேரவை (Tamil medium graduate forum of central province) முன்நின்று மேற்கொள்கின்றது.

ஆகவே மத்திய மாகாணத்தில் உள்ள பட்டப் படிப்பினை பூர்த்தி உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் அனைவரும் தங்களின் சுயவிபரக் கோவையினை tmgfofcp@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு தவறாது செப்டம்பர் 24ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இலங்கை பல்கலைகழகங்களிலோ அல்லது இந்திய பல்கலைகழகங்களிலோ அல்லது வேறு ஏதேனும் நாட்டில் உள்ள பல்கலைகழகங்களிலோ உள்வரியாகவோ அல்லது வெளிவாரியாகவோ கற்கைகளை பூர்த்தி செய்த பட்டதாரிகளிடம் இருந்தே இவ் விண்ணபங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக இலங்கையில் உள்ள ஏனைய அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவகங்களில் HND கற்கையினை பூர்த்தி செய்தவர்களும் தாங்களின் சுயவிபரக் கோவினை அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கின்றோம்.

மின் அஞ்சலினை அனுப்பும் பொது Subject line இல் தங்கள் பூர்த்தி செய்துள்ள பிரதான கற்கை நெறியினை குறிப்பிட்டு அனுப்பவும்.

தகவல்: மத்திய மாகாண தமிழ் மூல பட்டதாரிகள் பேரவை.

Related posts

ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பு விழாவை இரத்து செய்ய வேண்டும் ரஞ்சித்

wpengine

20 ஆம் திகதி மஹிந்தவை சந்திக்கவுள்ள 16பேர்

wpengine

நாட்டில் கடும் வெப்பநிலை வடக்கு, கிழக்கு, மலை­யகம் ஆகிய பிர­தே­சங்­களில் நில­வி­வரும் வரட்­சி

wpengine