பிரதான செய்திகள்

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண பரீட்சைகள் ஒத்திவைப்பு!

மத்திய மாகாண பாடசாலைகளில் நாளை (15) நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (15) நடைபெற இருந்த 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள், எதிர்வரும் 17 ஆம் திகதி நடத்தப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை நடைபெறுவதாக இருந்த 10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் தவணைப் பரீட்சைகள் வரும் 22 ஆம் திகதி நடைபெறும்.

தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

உயர் கல்வியின்றி ஒரு இலட்சம் மாணவர்கள் நிர்க்கதி!

Editor

வங்கியில் குறைந்த பட்சம் 1500 ரூபாய் இருப்பு இருக்க வேண்டும். பலர் சிக்கலில்

wpengine

“வடமாகாணமும் எமது தாயகமே”32 வருடங்கள், ஆனால், தீர்வுதான் எட்டவில்லை

wpengine