Breaking
Sun. Nov 24th, 2024

(வி.நிரோஷினி )

“மதவாதத்தை பரப்புவோர் தொடர்பில் கண்டிறிவதற்காக, விசேட ​குழுவொன்றை நியமிக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, பொதுபல சேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார். பொதுபல சேன தலைமையகத்தில் நேற்றுப் புதன்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“பொதுபல சேனா அமைப்பைத் தடை செய்யுமாறும் ஞானசார தேரரைக் கைது செய்யுமாறும், சில இனவாதிகள் தொடர்ச்கியாக வலியுறுத்தி வருகின்றனர். இதனை முழுமையாக ஆராய்ந்து பார்க்காத அரசியல்வாதிகள், அவர்களின் கூற்றக்கு ஏற்றால் போல் மறுகருத்து தெரிவித்து வருகின்றனர். இருந்தும் எமது அமைப்பை இதுவரை தடை செய்ய உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை யாரும் முன்னெடுத்ததில்லை.

காரணம் அனைவருக்கும் தெரியும், எமது அமைப்பு சட்டவிரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்ததில்லை, தவறாக நடைபெறும் சம்பவங்களுக்கு எதிராகவே கிளர்ந்தெழுகின்றோம். நாம் முஸ்லிம்களுக்கோ, தமிழ்களுக்கோ எதிரானவர்கள் அல்லர். உலமா சபையின் செயற்பாடுகளுக்கே நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.

முஸ்லிம்களின் விவகாரம் தொடர்பில் நாம் ஒன்றும் புதிய கருத்துக்களை தெரிவிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் எதற்கெல்லாம் தடை விதித்தாரோ, செய்ய அனுமதி வழங்காமல் இருந்தாரோ அவற்றையே நாம் இன்று வலியுறுத்தி வருகின்றோம். இதை சாதாகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிலர், எம்மை இனவாதிகள் எனத் தெரிவிக்கின்றனர்.

யார் முதலில் இனவாதிகள் என்பதை இந்த அரசாங்கம் தெரிவிந்துகொள்ள வேண்டும். அனைத்து மதங்களுக்கும் சமமான, அனைத்து மதம் சார் விடயங்களை ஆராய, விசேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *