பிரதான செய்திகள்

மதம்,இனம் அடிப்படையாக கட்சிகளை பதிவு செய்ய முடியாது.

எதிர்வரும் காலங்களில் மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவது தொடர்பிலும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

அவ்வாறான அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கு, கால அவகாசம் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளிட்ட ஏனைய ஆணைக்குழுக்கள், தேசிய மற்றும் மதங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளின் பதிவு தொடர்பில் முன்வைத்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்தே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

பெட்ரோலியக் கூட்டுத்தாபன சூத்திரத்தை செயல்படுத்த ஒரு ஒப்பந்தம்.

Maash

சிங்கலே என்ற கொடியுடன் பதற்றம் (விடியோ)

wpengine

முசலி-சவேரியார்புரம் கிராமத்தில் ஒருவர் துாக்கிலிட்டு தற்கொலை

wpengine