Breaking
Wed. Nov 27th, 2024

(நாச்சியாதீவு பர்வீன்)

மதக்கல்வியே ஒருவருடைய வாழ்க்கையை செப்பனிடும்.எனவே மதக்கல்வியினை எல்லா மதங்களும்,ஊக்குவிக்க வேண்டுமென அநுராதபுர மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.

அண்மையில் கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் மாணவர்களுக்கான மத்ரசா கட்டிடம் திறப்புவிழா வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் பொதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கூறுகையில் ஒரு பின்தங்கிய மாவட்டத்தில் சிறுபான்மையாக இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன், எனது சமூகத்தின் இருப்பும்,இறைமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். எதிர்கால எமது இளம் சமூகம் பூரணமான கல்விச்சமூகமாக மாற்றவேண்டும். அப்போதுதான் நவீன சவால்களுக்கு முகம் கொடுத்து வாழ முடியும், கல்வி ஒன்றே நமது சமூகத்தின் தீர்வு எனவே தான் கல்வி அபிவிருத்திப்பணிகளில் நான் முன்னின்று செயற்பட விரும்புகிறேன்.

மதக்கல்வியே ஒருவருடைய வாழ்க்கையை செப்பனிடும்.அதற்காய உலகக்கல்வி தேவை இல்லை என்று யாரும் பிழையாக அர்த்தம் கொள்ளக்கூடாது. உலக க்கல்வியின் பயன்பாடு இப்போதுகளில் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது எனவே இவ்விரண்டு கல்வியிலும் நமது சமூகம் கூடிய அக்கரை செலுத்த வேண்டும்,என அவர் மேலும் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *