பிரதான செய்திகள்

மண் அகழ்வு சடலம்! நானாட்டான் பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்

மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் மண்ணில் மூழ்கி மரணமான சம்பவம் சிலாபத்துரை பகுதியில் நேற்று (3) இரவு இடம் பெற்றுள்ளது. 

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று (3) இரவு டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மண் ஏற்றுவதற்காக வாகனத்தின் சாரதியுடன் உதவியாளர்கள் 4 பேர் உட்பட 5 பேர் குஞ்சுக்குளம் சென்று குறித்த டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றியுள்ளனர்.

பின்னர் குறித்த மண் சிலாபத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் மேலும் 3 உதவியாளர்கள் முன் இருக்கையில் இருந்துள்ளனர்.

5 ஆவது நபர் டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றப்பட்ட பகுதிக்கு மேல் ஏறி படுத்துள்ளார்.

குறித்த டிப்பர் வாகனம் குஞ்சுக்குளத்தில் இருந்து சிலாபத்துறை நோக்கி சென்ற நிலையில், சிலாபத்துறை பகுதியில் உரிய இடத்தில் மண் கொட்டப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

இதன் போது மண் மீது எறி படுத்துள்ள மன்னார் தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை என்பவரே கொட்டப்பட்ட மண்ணினுள் சிக்கியுள்ளார்.

மண் கொட்டப்பட்ட நிலையில் மீண்டும் குறித்த டிப்பர் வாகனமும் அதில் பயணித்தவர்களும் குஞ்சுக்குளம் பகுதிக்குச் சென்ற நிலையில், குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதி உட்பட ஏனைய மூவரும், குறித்த நபரை தேடிய போது குறித்த நபர் அங்கே இருக்கவில்லை.

மீண்டும் மண் கொட்டப்பட்ட இடத்திற்கு வந்து பார்த்த போது குறித்த நபர் அங்கே மண்ணில் புதைந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக குறித்த குடும்பஸ்தரை மீட்டவர்கள் முருங்கன் வைத்திய சாலைக்கு கெண்டு சென்றுள்ளனர். எனினும் குறித்த குடும்பஸ்தர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த குடும்பஸ்தரின் சடலம் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறித்த டிப்பர் வாகனம் மற்றும் மணல் அகழ்வு நானாட்டான் பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவருடையது என தெரிய தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரனைகளை சிலாபத்துறை மற்றும் முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவினால் அதிகரிப்பு

wpengine

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

wpengine

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் சுதந்திர தினச் செய்தி

Maash