பிரதான செய்திகள்

மண்ணெண்னை கொள்வனவு செய்ய அரசாங்கம் நிதி வழங்க நடவடிக்கை! மனோ கடிதம்

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன், மின்சக்தி மற்றும் வலுசக்தி கஞ்சன விஜேசேகரவிடம் வலியுறுத்தி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மண்ணெண்ணெய் விலையேற்றத்தை சமாளிக்கும் முகமாக, குறைவருமான மக்களுக்கு,  பணக்கொடுப்பனவுகளை நேரடியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமது தினசரி வாழ்வு தேவைகளுக்காக மண்ணெண்ணெயை பயன்படுத்தும் பின்தங்கிய மக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

 எனினும், இந்த நிவாரணம்,  மண்ணெண்ணெயை தவறாது பயன்படுத்தும் மலைநாட்டு பெருந்தோட்டங்களில் வாழும் பின்தங்கிய மக்களுக்கும், கொழும்பு மாநகரத்தில் வாழும் பின்தங்கிய குடியிருப்பு மக்களுக்கும் வழங்கப்படுவதை கட்டாயமாக உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

மன்னார், தொங்குபாலம் கவனிப்பாரற்ற நிலையில் கவனம் செலுத்தாத அதிகாரிகள்

wpengine

பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஆலோசனை

wpengine

போலியான செய்தி! மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை

wpengine