பிரதான செய்திகள்

மண்ணெண்ணெய் கொள்வனவுக்கான உயிரை விட்ட மொஹமட் இலியாஸ்

நேற்றைய தினமும் (19) 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினமும் எரிவாயு வரிசைகள் காணப்பட்ட நிலையில் சில இடங்களில் வீதிகளை மறித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதேவேளை, மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக கண்டி வத்தேகம பிரதேசத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

எல்லேபொல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வத்தேகம உடுதலவின்ன பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய மொஹமட் இலியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த அந்த நபர், மழையில் நனைந்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாட்டில் தீவிரமடையும் டெங்கு நோய்!

Editor

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற எதிரியே! விக்னேஸ்வரன்

wpengine

வவுனியா பொலிஸ் அதிகாரி போதைப்பொருள் பயன்படுத்திவுள்ளார்.

wpengine