Breaking
Thu. Apr 25th, 2024
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இம்முறை வெளியான 2015 கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கிவரும் காத்தான்குடி,ஏறாவூர்,ஒட்டமாவடி உள்ளிட்ட மூன்று கல்விக் கோட்டங்களிலுமுள்ள பாடசாலைகளில் அதிகமாக 30 மாணவ,மாணவிகள் 9ஏ சித்தியை பெற்று காத்தான்குடி பிரதேசத்திற்கும்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கும் ,காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் தெரிவித்தார்.

2015 கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவிகள் 14 பேரும்,காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியலாய மாணவர்கள் 4பேரும்,காத்தான்குடி மில்லத் மகளிர் மஹா வித்தியாலய மாணவிகள் 4பேரும் ,காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் 3பேரும்,காத்தான்குடி ஸாவியா வித்தியாலய மாணவிகள் 3பேரும்,காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலய மாணவி ஒருவரும்,காத்தான்குடி பதுறியா வித்தியாலய மாணவி ஒருவருமாக மொத்தம் 30 பேர் காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்தில் 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளதாகவும்,கடந்த வருடம் எமது கோட்டத்;தில் 16 மாணவ ,மாணவிகள் 9ஏ சித்தி பெற்றதாகவும் கடந்த வருடத்தை விட இவ் வருடம் அதிகமான மாணவர்கள் 9ஏ சித்தி பெற்றதாகவும் இதில் 7ஆண் மாணவர்களும் 23 பெண் மாணவர்களும் அடங்குவதாகவும் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்திலுள்ள 13 கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை தோற்றும் பாடசாலைகளில் 30 முப்பது பேர் 9ஏ சித்தி பெற்றுள்ளமையானது மாணவர்களின் கல்வி வளர்ச்சியையும்,ஆசிரியர்களின் இடை விடா பங்களிப்பையும் எடுத்துக் காட்டுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 30 மாணவர்களும்,ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் 16 மாணவர்களும் ,ஒட்டமாவடி கல்விக் கோட்டத்தில் 8 மாணவர்களுமாக மொத்தம் 54 மாணவ,மாணவிகள் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 9ஏ சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *